கண் நீர் அழுத்த நோய்(கிளக்கோமா)

Discussion in 'Health care Prevention' started by saravanakumari, Apr 17, 2018.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,159
    Likes Received:
    982
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    மருத்துகள், அறுவை சிகிச்சைகள் , instruments என எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் , இழந்தால் ( குறைந்தால் ) , திரும்பப் பெற முடியாத, முழுவதும் சீரமைக்க முடியாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன..

    அவற்றுள் ஒன்று , கண் நீர் அழுத்த நோய் எனப்படும் glaucoma வால் ஏற்படும் பார்வை இழப்பு( blindness) மற்றும் சுற்றுப் பார்வை குறைபாடு. ( visual field loss)
    கிளக்கோமா narrow angle, open angle என இருவகைப்படும்.

    Narrow angle - குறுகிய கோணம் உடையவர்களுடைய கண்ப்ரெஷெர், அறிகுறிகளுடன் கூடியதாய் இருக்கும். தலைவலி, வானவில்லைப் போன்ற ஒளி வட்டங்கள், திடீரென பனிபோல் மூடும் பார்வை ஆகிய அறிகுறிகள் இருக்கும். சரியான சமயத்தில் கண்டுபிடித்தால் எளிமையானதொரு லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.

    Open angle -ஒப்பன் ஆங்கிள் கிளக்கோமா தான் நிஜமான வில்லன். இன்றளவும், பலபேரின் பார்வையைப் பறித்துக் கொண்டிருக்கிறது. பரம்பரையாக வரக்கூடிய இந்நோய், முதலில், கீழ்ப்பார்வை, பக்கப் பார்வை ஆகியவற்றைக் குறைத்துக்கொண்டே வரும். நேர்ப்பார்வை, நோய் முற்றும்வரை தெரிந்து கொண்டே இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள், மிகத்தாமதமாகத்தான் டாக்டரிடம் வருகிறார்கள்.
    தாங்களாகவே கண்புரை என்று நினைத்துக் கொண்டு, முழுவதும் மறைத்ததும் டாக்டரிடம் போய்க் கொள்ளலாம் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள்

    ** கண்ணில் உள்ள aqueous humor என்னும் திரவம் இயற்கையாக வெளியேறும் பாதைகள் செயலிழக்கும் போது, திரவ அழுத்தம் அதிகமாகி, ஆப்டிக் நரம்பை [பார்வை நரம்பு] பாதிக்கும். இது ஏன் பலபேர் பார்வைக்கு வில்லனாக இருக்கிறது என்றால், இது முற்றிப் போகும் வரை அறிகுறி இருப்பதில்லை. ரெகுலர் பரிசோதனைகளின் போதே தெரிய வருகிறது.


    **இதற்கான பரிசோதனைகள் என்ன?
    field testingஎனப்படும் பக்கப்பார்வை மற்றும் கீழ், மேல் பார்வைக்கான பரிசோதனை.
    nerve fibre layer scan எனப்படும் பரிசோதனையில், பார்வை நரம்பு, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின், திண்மை அளக்கப்பட்டு , தேய்மானம் இருக்கிறதா என்று கணக்கிடப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளின் மூலம் மிகஆரம்ப நிலையிலேயே கிளக்கோமாவைக் கண்டுபிடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.


    ** இது பரம்பரையாக வரக்கூடியதா?
    ஆம். கட்டாயமாக வரும் என்பதில்லை. ரத்த சொந்தங்களுக்கு இருந்தால், அதிகப்படி கவனத்துடன் செக்கப் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும், உங்கள் கண் மருத்துவரிடம், குடும்பத்தில், இந்நோய் உள்ளதென்பதைக் கூற வேண்டும்.


    ** என்ன அறிகுறி?
    அறிகுறியே இருக்காது. ஆரம்பத்தில் வலி, சிவப்பு, தலைவலி, பார்வைக்குறைவு எதுவுமே இருக்காது. முற்றிய பின்னர் நடப்பதே தடுமாற்றமாக இருக்கும்.


    ** குணமாக்க முடியுமா?
    ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், மருந்துகளால், நன்றாக maintain பண்ண முடியும். தாமதமாகக் கண்டுபிடித்தால், இருக்கின்ற பார்வையைக் காப்பாற்ற மட்டுமே போராட்டம்.


    **எந்த வயதில் வரும்.?
    முன்னரெல்லாம், ஐம்பது வயதுக்கு மேல் வந்து கொண்டிருந்தது. இப்போது, சர்க்கரை நோய் போல, சீக்கிரமே வந்து விடுகிறது. இளம் வயதிலிருந்து செக்கப்பில் கண் ப்ரெஷர் பார்க்கிறோம்.

    **குழந்தைகளுக்கு வருமா?
    பிறவியில் சில குழந்தைகளுக்கு இருக்கும். கருவிழி பெரிதாக, நீர் கோர்த்தாற்போல் இருக்கும். பரம்பரை வியாதியாக உள்ள குடும்பங்களில், சமயத்தில் பதின்பருவத்திலும், இருபது, முப்பதுகளிலும் வருகிறது.


    ** இதைத் தடுக்க முடியுமா?
    முடியாது, ஜெனெடிக் என்பதால், உணவுப் பழக்கங்களாலோ, வாழ்க்கை முறையாலோ, பயிற்சிகளாலோ தடுக்க முடியாது.
    பிளட் ப்ரெஷர்- ரத்தக் கொதிப்புக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?
    கிடையாது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் கூடுதல் கவனம் தேவை.


    ** மருத்துவம் என்ன?
    தொடர்ந்து, அதற்கான கண்மருந்து உபயோகிக்க வேண்டும், சிலசமயங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படும்.


    ****எச்சரிக்கை
    1.மருந்துகளை சரியாக உபயோகிக்காமல், “எனக்கு ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை” என விரக்தியாகப் பேசுபவர்களுக்கு:
    ‘” தயவு செய்து மருந்துகளை சரியாகத் தவறாமல் பயன்படுத்துங்கள். இல்லையெனில், இருக்கும் பார்வையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் அபாயம் உண்டு.”


    2. டாக்டரிடம் நேரம் செலவழிக்கப் பயந்து , கண்ணாடிக் கடைகளில் மட்டுமே தொடர்ந்து கண் டெஸ்ட் செய்து கொள்பவர்கள் கவனம்..

    Dr.Rohini krishna
     
    Athvika likes this.
  2. Athvika

    Athvika Member

    Joined:
    Feb 14, 2018
    Messages:
    34
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Nice info
     

Share This Page